சினிமா செய்திகள்

ஒசாகா விருதுக்கு தேர்வு பெற்றுள்ள தனுஷ் படம்: விருது கிடைக்குமா?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் தமிழ் திரைப்பட விருதுகள் என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விருது இந்தியாவின் தேசிய விருதுக்கு சமமாக திரையுலகினர் கருதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஒசாகா திரைப்பட விருதுகள் வரும் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விருதுக்கு பல திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் போன்ற பிரிவுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்துக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஏற்கனவே தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள நிலையில் ஒசாமா தமிழ் திரைப்பட விருதும் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version