சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு அசுரன் படம் தேர்வு!

Published

on

வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் வெகுஜன மக்களின் பிம்பமாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசுரன் படம் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது.

இந்திய திரைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலக சினிமா பிரபலங்கள், திரைத்துறை வல்லுநர்கள், நடிகர் நடிகைகள் கலந்துகொள்வார்கள்.

இந்தாண்டு கடந்த நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து வரும் ஜனவரி 16 முதல் 24 ஆம் தேதி வரையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெகுஜன பிரிவில் திரையிடுவதற்கு, அசுரன் படம் தேர்வாகியுள்ளது. சாதிய ரீதியலான முற்றுப்புள்ளி வைத்து, செருப்படி கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்திருப்பதால் வெகுஜன பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனுஷ், வெற்றிமாறன் என படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version