சினிமா செய்திகள்

’அசுரன்’ பச்சையம்மாவா இது? இளம் நடிகைகளுக்கு சவால் விடும் போட்டோஷூட்!

Published

on

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சுவாரியார் தமிழில் ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். பச்சையம்மாள் என்ற கேரக்டரில் அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்பதும் தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு கிடைத்த தேசிய விருது மஞ்சு வாரியாருக்கு நூலிழையில் மிஸ் ஆகி விட்டது என்பது துரதிஷ்டமான ஒன்று.

இந்த நிலையில் ’அசுரன்’ படத்தில் வயதான கேரக்டரில் நடித்தாலும், அவரது வயது 42 என இருந்தாலும் அவர் இப்போதும் இளமையாகத் தான் உள்ளார் என்பதும் மலையாளத்தில் இன்னும் இளம் நாயகிகளுக்கு சவால் விடுக்கும் வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோசூட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோஷூட்டில் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இளமை தோற்றத்துடன் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version