ஆன்மீகம்

ஜோதிடம்: குருபகவான் நுழைந்த மிருகசீரிஷம் நட்சத்திரம் – பணத்தில் வெற்றி பெறும் ராசிகள்!

Published

on

ஜோதிடம்: குருபகவானின் புதிய இடமாற்றம் – பணத்தில் வெற்றி காணப்போகும் ராசிகள்

GURU LUCK:

குருபகவான் ஆகஸ்ட் 20ஆம் தேதி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும், சில ராசிகளுக்கு யோக வாழ்வு காத்திருக்கிறது. அந்த ராசிகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

குருபகவான்:

நவகிரகங்களில் மங்களம் மற்றும் செழிப்பிற்கு பிரதானமான கிரகம் குரு. செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் போன்ற பலன்களை வழங்கக்கூடியவர். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடமாற்றம் அடைய ஒரு வருடம் வரை ஆகும். அவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால், அந்த ராசிக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு:

குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மே மாதம் முதல் பயணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 20ஆம் தேதி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்ததில் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றன.

ராசிகள்:

மேஷ ராசி:

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை கொண்டுவரும். பணவரவில் முன்னேற்றம் காணலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும், மற்றவர்களிடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மேலும், வேலை வாய்ப்புகள், தொழில் ஆரம்பிக்க வாய்ப்புகள், புதிய முதலீடுகள் போன்ற பலன்கள் கிடைக்கும்.

கடக ராசி:

குருபகவானின் இந்த இடமாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். வேலை செய்யும் இடத்தில் சிறந்த செயல் திறன் காணப்படும், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். நிதி நிலை மேம்படும், புதிய முதலீடுகள் லாபகரமாக இருக்கும்.

விருச்சிக ராசி:

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். நண்பர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும், பழைய நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், வியாபாரத்தில் லாபம், நிதி நிலை முன்னேற்றம், ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்களை பெறலாம்.

Poovizhi

Trending

Exit mobile version