தமிழ்நாடு

ரஜினி அரசியல் வருகையை ‘கணித்த’ ஜோதிடர் ஷெல்வி; தொழிலை கைவிடுகிறார்!

Published

on

நடிகர் ரஜினிகாந்த், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சியைக் கட்டாயம் தொடங்குவார் என்று தெரிவித்திருந்தார் ‘எதார்த்த ஜோதிடர்’ ஷெல்வி. மேலும், ரஜினி மட்டும் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை விட்டு விலகிவிடுவேன் என்றும் கூறியிருந்தார் ஷெல்வி.

நேற்று யாரும் எதிர்பாராத விதமாக ரஜினி, ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ‘என்னுடைய உடல்நிலை பாதிப்பு ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னரே முடித்துக் கொண்டார் ரஜினி. அதே நேரத்தில் ரஜினி, 2017 ஆம் ஆண்டு, ‘சிஸ்டம் சரியல்ல. அத மாத்தணும். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று கூறியிருந்தார். இதை வைத்து ஜோதிடர் ஷெல்வி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினியின் கட்சி அறிவிப்பு வரும் என்றும், அப்படி வரவில்லை என்றால் நான் ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்றும் சவால் விட்டிருந்தார். தற்போது ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்பதால் ஷெல்வி, அவரது தொழிலைவிட்டு வெளியேறி விடுவாரா என்று நெட்டிசன்கள் நச்சரித்து வருகிறார்கள்.

ஷெல்வி பேசிய வீடியோ இதோ:

Trending

Exit mobile version