இந்தியா

பாஜகவில் சேர்ந்தால் பெயில், இல்லையேல் சித்ரவதை: அகில் கோகாய் அதிர்ச்சி தகவல்

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு சிஏஏ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து சிறைக்கு சென்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாய் என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் தற்போது பாஜகவுக்கு எதிராக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவரது பிரச்சாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகில் கோகாய் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கூறுகையில் ’சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறைக்கு சென்ற போது எங்களை உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை செய்தார்கள். ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவில் இணைந்தால் மட்டும் உடனே பெயில் கிடைக்கும் இல்லையேல் தொடர்ந்து சித்திரவதை தான் என்றும் விசாரணை அதிகாரி எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.

சிஐஏ சட்டத்திற்கு எதிராக போராடி கைதான அசாமியின் சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாய் அவர்களின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version