இந்தியா

அசாமில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைப்பு – காரணம் என்ன?

Published

on

இந்திய அளவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் இவற்றின் விலைகள் தலா 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே மதுபானங்களில் வரி விதிப்பையும் 25 சதவீதம் குறைத்து ஆணைப் பிறப்பித்துள்ளது அசாம் மாநில அரசு.

தமிழகத்தைப் போலவே அசாம் மாநிலத்திலும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதையொட்டித் தான் இந்த விலை குறைப்பு அதிரடி அறிவிப்பை அசாமில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்தான அறிவிப்பை அசாம் மாநில சட்டப்பேரவையில் அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வாஸ் வெளியிட்டார். வரும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அசாமில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும்.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம் போன்ற பல மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக, அனைத்து மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த அதிக பரப்புரைக் கூட்டங்களை நடத்தியும், அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டும் மக்களைக் கவர்ந்து வருகிறது.

ஒரு பக்கம் மத்திய அரசும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகமும், ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க வாய்ப்பே இல்லை’ என்று தொடர்ந்த சொல்லி வரும் நிலையில், அசாமின் பாஜக அரசு வேறு ரூட்டில் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

Trending

Exit mobile version