இந்தியா

குடும்பத்துடன் பொழுதை கழிக்க 2 நாட்கள் விடுமுறை: அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!

Published

on

அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்காக இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளது அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் அசாம் மாநில அரசு அதிகாரிகள் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி தங்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்க சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அரசு அதிகாரிகள் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் முதல் கடை மட்டத்தில் உள்ளவர்கள் வரை பொருந்தும் என்றும் இந்த விடுமுறை நேரத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினரிடம் பொழுதைப் போக்கி புத்துணர்ச்சி பெற்று கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் பெற்றோர்கள் மற்றும் குடும்பம் இல்லாதவர்களும் இந்த விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவு கடந்த செப்டம்பர் மாதம் அஸ்ஸாம் அரசு எடுத்த நிலையில் ஜனவரி மாதம் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் அரசு அறிவித்தது போல் தமிழகம் உள்பட மற்ற மாநில அரசும் இதே போன்ற சிறப்பு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version