உலகம்

எரிபொருள் விலை உயர்வால் உலகில் முதல்முறையாக கவிழ்ந்த அரசு! அவசரநிலை பிரகடனம்!

Published

on

உலகிலேயே முதல் முறையாக கஜகஸ்தான் நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வு காரணமாக கவிழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள அரசுகள் பல்வேறு காரணங்களால் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ராணுவ புரட்சி காரணமாக பல நாட்டின் அரசியல் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் பெட்ரோல் டீசல் உள்பட எரிவாயு விலை உயர்வு காரணமாக கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் என்பவர் தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில் அந்நாட்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு எரிவாயு விலை உயர்ந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் புரட்சியாளர்கள் போராட்டம் செய்தனர். கடுமையான போராட்டம் காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. உலகிலேயே ஒரு நாட்டின் அரசு எரிவாயு விலை உயர்வு போராட்டம் கவிழ்ந்தது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 350 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜகஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ரஷ்யாவுடன் முன்னாள் சோவியத் நாடுகளும் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version