தமிழ்நாடு

‘ஓட்டுக்கு 10 ஆயிரம் கேளுங்க..!’- சீமான் சொல்லும் ஐடியா

Published

on

தேர்தல் சமயங்களில், ஓட்டுக்காக பணப் பட்டுவாடா நடைபெறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டியும் பல அரசியல் கட்சிகள், தங்களுக்கு வாக்குச் செலுத்தக் கோரி மக்களுக்குப் பல்வேறு இடங்களில் பணப் பட்டுவாடா செய்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அப்படிப் பணம் வாங்கும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐடியா ஒன்றைக் கொடுத்துள்ளார்.

‘அண்ணா பெயரில் கட்சி நடத்தி வருகிறார்கள் இன்றைய ஆண்ட, ஆளுகின்ற கட்சிகள். அவர் தான் இப்படிப் பணப் பட்டுவாடா செய்வதைப் பற்றி ஒரு முறை சொன்னால், ‘தங்கத்தை யாராவது தவிட்டு விலைக்கு விற்பானா’ என்று. அப்படிப்பட்ட அண்ணாவின் வார்த்தைகளை இன்றைய திராவிட கட்சிகள் மறந்து விட்டார்கள்.

இந்த முறையும் உங்கள் வீடு தேடி வந்து ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான். என் அன்பு மக்களே, அவர்கள் மிக அதிகமாக சம்பாதித்து வைத்துள்ளார்கள்.

அதனால் ஆயிரம், ஐநூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு வாக்குச் செலுத்தாதீர்கள். 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் கேளுங்கள். அவ்வளவு தொகை கொடுத்தால் தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லுங்கள்’ என சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் சீமான்.

 

seithichurul

Trending

Exit mobile version