தமிழ்நாடு

ஆசியாவின் முதல் பறக்கும் கார்: சென்னை நிறுவனம் அசத்தல்!

Published

on

உலகம் முழுவதும் வித்தியாசமான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வினாடா என்ற நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயார் செய்து உள்ளதாகவும் இந்த கார் ஆசியாவிலேயே முதல் பறக்கும் கார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த காரை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையைச் சேர்ந்த வினாடா நிறுவனத்தின் இளம் தொழில்நுட்ப குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த கார் ஹைபிரிட் முறையில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்றும் இந்த கார் பறக்க தயாராகி விட்டால் விரைவில் பொருள்களை ஏற்றுமதி செய்யவும் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொண்டு செய்யவும் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த காருக்கு வினாடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பொருள் பறவைகளின் தாய் என்றும் வினாடா நிறுவனத்தின் சிஇஓ யோகேஷ்வர் என்பவர் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த கார் முழுமையாக தயாராகி சோதனை ஓட்டத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த காரை ட்ரோன் போன்றே பயன்படுத்தலாம் என்றும் எந்த திசையில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம் என்றும் பயோ எரிபொருள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

900 கிலோ எடையுள்ள இந்த கார் 250 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும் என்றும் இரண்டு பேர் இந்த காரில் பயணம் செய்யலாம் என்றும் இந்த காரை செங்குத்தாக பறக்க வைக்கலாம் என்பதால் எந்த இடத்திலும் தரை இருக்கவும் முடியும் என்றும் யோகேஷ் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version