விளையாட்டு

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அஸ்வின் உடன் நடனமாடியா ஹர்திக் பாண்ட்யா, குல்தீப்..!

Published

on

இந்தியக் கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் ஆகிய மூவரும் இணைந்து தளபதி விஜய்-ன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ போடாதவர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு சமுக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் வாத்தி கம்மிங் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சென்னையில் இங்கிலாந்து- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அஸ்வின் ரவிச்சந்திரன் மைதானத்திலேயே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த வீடியோ வைரல் ஆகி முடிவதற்குள் மற்றொரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அஸ்வின் உடன் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் ஆகிய மூவரும் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ காட்சியை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிய அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version