சினிமா செய்திகள்

ஒரே படத்தில் நடிக்க்கும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ்: இயக்குனர் இவர்தான்!

Published

on

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்று செய்திகள் அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, தர்ஷா, பவித்ரா உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின் திரைப்படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதே படத்தில் காமெடியனாக புகழ் நடிக்கவிருக்கிறார் என்பதும் இருவரும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்கவிருப்பவரும் ஒரு அறிமுக இயக்குநர் என்றும் அவர் ஹரிஹரன் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஸ்வினுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட முக்கிய விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ‘குக் வித் கோமாளி’ மூலம் பல இளம் பெண்களின் மனதை கவர்ந்த அஸ்வின் ஹீரோவாகி இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version