சினிமா செய்திகள்

அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்: தயாரிப்பாளர் இவர்தான்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அஸ்வின் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பெற்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி அஸ்வினுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் நடிக்க அஸ்வின் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது

டிரைடண்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் இந்த மூன்று படங்களை தயாரிக்க உள்ளார் என்றும் இந்த மூன்று படங்களுக்கும் சேர்த்து மிகப் பெரிய தொகையை அஸ்வினுக்கு சம்பளமாக அவர் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிகிறது

மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் படமொன்றிலும் அஸ்வின் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது

மேலும் அஸ்வின் நடிப்பில் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாக இருக்கும் மூன்று படங்களில் இரண்டு படங்களில் புகழ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version