உலகம்

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு!

Published

on

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்பூரில் கொண்டாடி வருகிறார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக யார் முதல்வராக தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்று பெரிய கேள்வி இருந்தது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றும் கூட அதை கொண்டாட முடியாத நிலையில் நீடித்தது.

நேற்றுதான் பெரிய இழுபறிக்கு பின் மத்திய பிரதேச முதல்வர் தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அசோக் கெலாடிற்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அசோக் கெலாட் ராஜஸ்தானின் 14வது முதல்வர் ஆவார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார். இவர் 1998 முதல் 2003 மற்றும் 2008 முதல் 2013 என்று இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version