கிரிக்கெட்

ஆஷஷ் தொடரில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: 3-0 என்ற கணக்கில் தொடர் வெற்றி

Published

on

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வழக்கம்போல் பேட்டிங்கில் சொதப்பிய 185 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்ஸில் எடுத்தது அதேபோல் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாக விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆககினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்று உள்ளது என்பதும் அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் ஸ்காட் போலந்த் என்பவர் அறிமுகமான நிலையில் அவர் தனது முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version