இந்தியா

ஷாருக்கான் மகனுக்கு ஜாமின்: மூத்த வழக்கறிஞரின் வாதத்தால் கிடைத்தது என தகவல்!

Published

on

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு 26 நாட்களுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் ஓரிருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்த போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிரமாக ஆர்யன்கானுக்க்கு ஜாமின் வழங்கக்கூடாது என வாதாடியதால் நீதிபதிகள் ஜாமின் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரியன் கானுக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்முறை ஆரியன் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவர்கள் வாதம் செய்தார்.

அவரது வாதத்தில் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் அவரிடமிருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் திறமையாக வாதாடினார். அவருடைய வாதத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ஆரியன்கான் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போதைப் பொருள் தடுக்க அதிகாரிகள் தரப்பில் வாதாடியபோது ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி விடுவார் என்று வாதிடப்பட்டது. இருப்பினும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆர்யன்கான் வெளிநாட்டுக்கு தப்பியோட மாட்டார் என உத்தரவாதம் கொடுத்ததாகவும், இதனையடுத்தே மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version