இந்தியா

நாப்கினில் மறைத்து வைத்து போதைப்பொருள்: ஷாருக்கான் மகன் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

Published

on

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மும்பையில் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து கோவா செல்ல இருந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்துவதாக வெளிவந்த தகவலை அடுத்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அந்த கப்பலை சுற்றிவளைத்து சோதனை செய்தனர்.

அப்போது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட பல பிரபலங்களின் வாரிசுகள் அந்த கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த எட்டு பேரில் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஒருவருவரான பெண் ஒருவரிடம் விசாரணை செய்த போது நாப்கினில் மறைத்து வைத்து போதை பொருள் கடத்தி வந்தது தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் போதைப்பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோட் நம்பர் இருந்ததாகவும் எவ்வாறு பணம் அனுப்ப வேண்டும் என்பது குறித்த ரகசிய வழிமுறைகளும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மரத்தொழில் வியாபார தொழில் செய்பவரின் வாரிசு, முன்னாள் நீதிபதியின் வாரிசு, மாடல் அழகி என பலர் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version