இந்தியா

ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரமா? உயரதிகாரி மீது திடுக்கிடும் புகார்!

Published

on

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பையில் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விடுவிக்க ரூபாய் 25 கோடி பேரம் பேசியதாக போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிலையில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார் என்பதும் இன்று அவரது ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே என்பவர் மீது லஞ்ச புகார் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கிரண் கோஷா என்ற தனியார் துப்பறியும் அதிகாரி சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆரியன்கான் கைது செய்யப்படுவதற்கு இவரே காரணம் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கிரண் கோஷா தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்யன்கானை விடுவிக்க 25 கோடி வரை ஷாருக்கான் தரப்பிடம் லஞ்சம் கேட்டதாகவும் 18 கோடி ரூபாய் வரை பேரம் பேசி முடிக்கப்பட்டதாகவும் அதில் 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவுக்கு கொடுக்க வேண்டும் என்றும் டீலிங் பேசியதாக கூறப்படுகிறது

ஷாருக்கான் மேனேஜரிடம் பேசப்பட்ட இந்த டீலிங் குறித்து நீதிமன்றத்தில் தற்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆர்யன்கானை விடுவிக்க லஞ்சம் கோரியதாக சமீர் வான்கடே மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

இந்த நிலையில் திடீரென டெல்லி சென்றுள்ள சமீர் வான்கடே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். டெல்லிக்கு தான் வேறு வேலையாக வந்திருப்பதாகவும் தேவையில்லாமல் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் தன்னுடைய தாய் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும் தனக்கு இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான குற்றச்சாட்டு மற்றும் சம்மன் அனுப்பப்படவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

 

seithichurul

Trending

Exit mobile version