சினிமா
டெடி இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா…பரபர அப்டேட்
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி ஆகிய படங்களை இயக்கியவர் ஷக்தி சௌந்தர் ராஜன். இவர் கடைசியாக இயக்கிய டெடி திரைப்படம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஓடிடியில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த டெடி பொம்மை கதாபாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துபோனது. எனவே, அடுத்து டெடி 2 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது சக்தி சவுந்தர் ராஜன் – ஆர்யா மீண்டும் இணையவுள்ளனர். ஆனால், டெடி 2 அல்ல. இது முழுக்க வேறு மாதிரியான கதையாம். பக்கா ஆக்ஷன் என செய்திகள் வெளிவந்துள்ளது.