சினிமா செய்திகள்
’டெடி’ இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா: டைட்டில் அறிவிப்பு!
டெடி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ‘டெடி’. இந்த படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஆர்யாவுடன் இணையும் படத்திற்கு ‘கேப்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது என்பதும், அந்த டைட்டில் போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் காவ்யா ஷெட்டி நாயகிகளாக நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் டி இமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Once again teaming up with My Favourite Person, Director nd brother @ShaktiRajan for #Captain @immancomposer sir Magic ???????? with @madhankarky brother @ThinkStudiosInd @SimranbaggaOffc @AishuLekshmi @IAmKavyaShetty @DopYuva @moorthy_artdir @PradeepERagav pic.twitter.com/JZebLwebJo
— Arya (@arya_offl) November 18, 2021