சினிமா செய்திகள்

இன்று நள்ளிரவு வெளியாகிறது ‘டெடி’: ஆர்யா ரசிகர்கள் ரெடியா?

Published

on

கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின் இயல்புநிலை திரும்பிய போதிலும் திரையரங்குகளில் அதிக கூட்டம் வராததால் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் தான் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே சூரரை போற்று, க/பெ ரணசிங்கம், மூக்குத்தி அம்மன், உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படமும் இன்று நள்ளிரவு முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஆர்யா மற்றும் ஆர்யாவின் மனைவி சாயிஷா, சாக்ஷி அகர்வால், சதீஷ், கருணாகரன், மகிழ்திருமேனி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஹாட்ஸ்டாரில் ‘டெடி’ திரைப்படம் சிவராத்திரியை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் ஆர்யாவின் ரசிகர்கள் தயாராகிக் கொள்ளுங்கள் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version