சினிமா செய்திகள்
மனைவியின் பிறந்த நாளில் ஆர்யா பதிவு செய்த டுவிட்: வைரல் புகைப்படம்!
பிரபல நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களது திருமணம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடைபெற்றது என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் ’காப்பான்’ திரைப்படத்தில் நடித்தபோது காதல் உண்டானது என்பதும் இதனை அடுத்தே இந்த காதல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் ஆர்யா, சாயிஷா இருவரும் ’டெடி’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆர்யா – சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தையின் புகைப்படத்தை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சாயிஷா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆர்யாவும் தன்பங்கிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சாயிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நீங்கள் மிகவும் அன்பானவர் என்றும் உங்களை போன்ற அன்பான ஒருவரை மனைவியாகப் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி நான் அதிர்ஷ்டசாலி என்றும் ஆர்யா அந்த டுவிட்டில் கூறியுள்ளார். மேலும் சாயிஷாவுடன் உள்ள கிளாமர் புகைப்படம் ஒன்றையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Happy birthday my wifey ???????????????????? May the special love you have for me keep increasing everyday ???????? You are the most loving person and I m very lucky to have you in my life ????????????@sayyeshaa pic.twitter.com/KbbyHT3tz9
— Arya (@arya_offl) August 12, 2021