சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குநருடன் கைகோர்த்த அரவிந்த்சாமி!

Published

on

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என இரண்டு அடல்ட் காமெடி வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், ஆர்யா, சாயிஷாவை வைத்து கஜினிகாந்த் என்ற காமெடி ரொமாண்டிக் படத்தை எடுத்து படுதோல்வியை சந்தித்தார். ஆனால், அந்த படத்தின் மூலம் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்று பார்த்தால், பல நாட்களாக பெண் தேடி அலைந்த ஆர்யாவுக்கு நாயகி சாயிஷாவுடனே திருமணம் ஆனது தான்.

இந்நிலையில், சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.

அரவிந்த்சாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு, புலனாய்வு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி இல்லாமல், அந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி வந்திருக்கிறது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

அடல்ட் காமெடி, ரொமாண்டிக் காமெடி ஜார்னர்களில் படம் இயக்கிய சந்தோஷுக்கு காக்கிச்சட்டை படம் எந்த அளவுக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version