சினிமா செய்திகள்

அரவிந்தசாமியின் ‘வணங்காமுடி’ டீசர் ரிலீஸ்!

Published

on

அரவிந்த் சாமி நடிப்பில் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகிய நிலையில் இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு ‘வணங்காமுடி’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அரவிந்த்சாமி அறிவித்திருந்தார். அதன்பின் ஒரு சில காரணங்களால் இந்த படம் 2017 ஆம் ஆண்டு தான் படப்பிடிப்பு தொடங்கியது.

ஒரே வருடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸாக தாமதமானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படத்தில் அவரை கொலை செய்வதற்காக ஒரு பெரிய கூட்டமே என்று தனித்தனியாக முயற்சி செய்கிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் சட்டத்துக்கு விரோதமானவர்களை எப்படி அடக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

அரவிந்த்சாமி ஜோடியாக ரித்திகாசிங் நடித்திருக்கும் இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன், கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் அந்தோணி படத்தொகுப்பில் கோகுல் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vanangamudi Official Teaser | Arvind Swami, Ritika Singh, Simran | D. Imman

Trending

Exit mobile version