சினிமா செய்திகள்

16 மில்லியன் பேர்.. மாஸ் காட்டிய நடிகர் அருண் விஜய்… வைரல் வீடியோ….

Published

on

பல வருடங்களாக நடித்தாலும் ‘தடம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருண் விஜய். அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அவருக்கு பிரேக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை அருண் விஜய் கொடுத்து விட்டார். கடைசியாக அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்னும் படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் நடிகர் பிரசன்னாவும் முக்கிய ரோல் செய்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு மாஃபியா ஓடாத நிலையிலும், அருண் விஜய்க்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. தற்போது பல படங்களில் கமிட்டாகி ஃபுல் பிஸியாக உள்ளார் அருண் விஜய். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஈரம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் ஒரு ஸ்பை திரில்லர் திரைப்ட்படம் இந்த “பார்டர்”.

இப்படத்தில் அருண் விஜய் இந்திய உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. யுடியூப்பில் இந்த வீடியோவை இதுவரை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version