சினிமா செய்திகள்

அருண் விஜய் – மிஷ்கின் இணையும் புதிய படத்தில் கலக்கல் அப்டேட்

Published

on

தனது இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருண் விஜய். அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அருண் விஜய்க்கு பிரேக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை அருண் விஜய் கொடுத்து விட்டார். கடைசியாக அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிகர் பிரசன்னாவும் முக்கிய ரோல் செய்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு மாஃபியா ஓடாத நிலையிலும், அருண் விஜய்க்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. 

தற்போது பல படங்களில் கமிட்டாகி ஃபுல் பிஸியாக உள்ளார் அருண் விஜய். அதைப் போலவே ‘சைக்கோ’ படத்திற்குப் பிறகு ‘பிசாசு 2’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பிஸியாக இருந்து வருகிறார் மிஷ்கின். 

இந்நிலையில் அவர், அருண் விஜய்யை வைத்து ஒரு புதிய படம் செய்ய கதை சொல்லியிருந்ததாக கோலிவுட் தகவல். கடந்த சில வாரங்களாக இந்தப் படம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தை எடுக்க தயாரிப்பாளர் கிடைத்து விட்டாராம். இதனால் கூடிய விரைவில் மிஷ்கின் – அருண் விஜய் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வரும் என எதிர்பார்க்கலாம். 

seithichurul

Trending

Exit mobile version