சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘அருவா’ படத்துக்கும் அருண் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை..!

Published

on

சூர்யாவின் ‘அருவா’ படத்துக்கும் அருண் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை என இயக்குநர் ஹரி தரப்பிலிருந்து விளக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ படத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காகப் பட வேளைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அதனால், சூர்யாவுக்கான கதையில்தான் அருண் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் சமுக வலைதளங்களில் பரவியது.

ஆனால், சூர்யாவுக்கான ‘அருவா’ கதை பின்னாளில் சூர்யாவை வைத்தே இயக்கப்படும் என்றும் ஹரி தற்போது தனது மைத்துனர் அருண் விஜய் உடன் புதிய கதை ஒன்றில்தான் பணியாற்றி வருகிறார் என்றும் ஹரி தரப்பினர் பக்கமிருந்து விளக்கங்கள் வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version