சினிமா செய்திகள்

அருண்விஜய்யின் அதிரடி ஆக்சன் : ‘யானை’ டீசர் வீடியோ!

Published

on

நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவான ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘யானை’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில நிமிடங்கள் தொழில்நுட்ப பிரச்சனையால் தாமதமானாலும் சற்று முன்னர் இந்த டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த டீசரில் அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்பதும் ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’பாம்பன் பாலம், ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், வெறும் துரோகம், ஒரு நட்பு, வெறும் அமைதி’

’இவருக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்’

ஆகிய வசனங்கள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த வசனங்கள் இந்த படத்தின் கதையை யூகிக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்துடன் ரிலீஸ் செய்ய ஹரி திட்டமிட்டு இருந்தாலும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் தான் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version