தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக காலநீட்டிப்பு!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து அவரது மர்ம மரணம் குறித்து விசாரணை செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 6 மாதத்திற்குள் விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆணையத்திற்கு அடுத்தடுத்து கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தன.

ஏற்கனவே 10 முறை ஆறு மாத காலம் அவகாசம் அளித்த நிலையில் தற்போது 11 வது முறையாகவும் ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் சற்று முன் தமிழக அரசு 11வது முறையாக 6 மாத காலம் நீடிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த ஆணையம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் ஆணையம் செயல்படாமல் இருக்கும் போது நிலையில் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்றும் இந்த ஆணையத்தை ஏன் கலைக்கக் கூடாது என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version