தமிழ்நாடு

நான் சாமியார் இல்லை, அருள்வாக்கும் கொடுப்பதில்லை: அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி!

Published

on

நான் சாமியார் இல்லை என்றும் நான் யாருக்கும் அருள்வாக்கு கொடுப்பதில்லை என்றும் என்னை சாமியார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி கொடுத்துள்ளார்.

தனக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த அன்னபூரணி அதன் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனால் காவல்துறையில் புகார் கொடுக்க வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

நான் போலி சாமியார் என்றும், சாமியார் என்றும் பலர் கூறிவருகின்றனர். நான் சாமியார் இல்லை என்றும், ஆன்மீக பணியை செய்ய வந்த ஒரு சாதாரண நபர் தான் என்றும், என்னுடைய வேலையும் அதுதான் என்றும் கூறினார்.

என்னிடம் பயிற்சி பெற்ற தீட்சை வாங்கியவர்களுக்கு நான் யார் என்று தெரியும் என்றும், நான் தலைமறைவாக வெளிவந்த செய்தி பொய்யானது என்றும், எனக்கு எதிராக காவல் துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும், என்னை காவல் நிலையத்துக்கு யாரும் அழைத்து விசாரணை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் நான் திடீரென சாமியார் ஆகி விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் ஆறு வருடமாக ஆன்மிகப் பயிற்சியை கொடுத்து வருகிறேன் என்று கூறினார். ஆதிபராசக்தி என்று நான் என்னை கூறவில்லை என்றும், நான் என்றைக்குமே என்னை கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக் கொண்டது கிடையாது என்றும், இது என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் என்னுடைய கணவர் மாரடைப்பால் தான் இறந்தார் என்றும் அவரது மறைவு குறித்து தேவையில்லாத வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடவுள் என்றால் என்ன? கடவுள் யார்? கடவுள் எங்கே இருக்கிறார்? என்னென்ன தீய சக்திகள் உள்ளன? என்பதை உணர்த்தவே நான் வந்திருக்கிறேன் என்றும் அந்த பணியை நான் தொடர்ந்து செய்வேன் என்றும் இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும் என்றும் தர்மம் நிலைநாட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version