தமிழ்நாடு

அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்!

Published

on

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மாணவ மாணவிகள் சுறுசுறுப்பாக விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 26ஆம் தேதி முதல் தொடங்கியது. இதன்படி தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சுறுசுறுப்பாக விண்ணப்பம் செய்து வந்தனர். www.tngasa.org, www.tngasa.in ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பதும் விண்ணப்பம் செய்ய கடைசி தினம் ஆகஸ்ட் 10 என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் மற்ற மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூபாய் 2 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்ப கட்டணத்தை இணையத்தின் மூலம் செலுத்த முடியாத மாணவர்கள் வங்கிகளில் டிடி எடுத்து அனுப்பலாம் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நிலையில் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்து விண்ணப்ப கட்டணமும் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கர்நாடகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version