தமிழ்நாடு

அரியர் தேர்வு கட்டாயம்.. யுஜிசி திட்டவட்டம்!

Published

on

அரியர் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது அறிவிப்பாக அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து, ஆல் பாஸ் என அறிவிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. அங்கு தான் எழுந்தது சர்ச்சை.

அரியர் தேர்வுகளை ரத்து செய்து ஆல்-பாஸ் என அறிவித்தால், பல்கலைக்கழகத்தின் அங்கிகாரத்தையே ரத்து செய்ய நேரிடும் என்று யுஜிசி அண்ணா பல்கலைக்கழகத்தை எச்சரித்தது.

உடனே, அரியர் தேர்வு செய்யவதை ஆதரித்தவர்களும், அதை எதிர்த்தவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் தேர்வு எழுதாமல் பாஸ் ஆக வேண்டும் என்று எப்படி நினைக்கலாம். இது குறித்து யுஜிசி சொல்வது என்ன என்று விளக்கம் கேட்டு வழக்கை நவம்பர் மாதம் வரை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் பல்கலைக்கழக அங்கிகாரக் குழுவான யுஜிசி, அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அங்கிகாரம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version