தமிழ்நாடு

மாநில அரசு ஒதுங்கிப்போக போகிறதா? வாதிட போகிறதா? அற்புதம்மாள் டுவீட்

Published

on

முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அற்புதம்மாள் மகன் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இன்று நடைபெறும் விசாரணையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அற்புதம்மாள் மட்டுமன்றி தமிழக மக்களே எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சற்று முன்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: அறிவின் விடுதலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்துவிட்டார். சட்டரீதியாக அதுகுறித்து சொல்ல எதுவும் இல்லை என கடந்த முறை போலவே மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா? அல்லது மூத்த வழக்கறிஞரை அமர்த்தி வாதிட போகிறதா? என்ற கேள்வியுடன் அற்புதம்மாள் இந்த ட்விட்டை முடித்துள்ளார்.

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்த முடிவை மாநில அரசு எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை அடுத்து மாநில அமைச்சரவை அவரை விடுதலை செய்ய தீர்மானம் இயற்றியது. ஆன்ல் இந்த தீர்மானத்தை தான் சமீபத்தில் ஆளுநர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version