இந்தியா

காஷ்மீர் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் கோரிக்கை: இல்லையென்றால் சுட்டுக்கொல்வோம்!

Published

on

காஷ்மீர் மாநிலத்தில் உரிய அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காஷ்மீர் தாய்மார்களுக்கு அவர் சில வேண்டுகோள் விடுத்தார். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்தில் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயரங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டோம். காஷ்மீரின் சமுதாய முன்னேற்றத்தில் தாய்மார்களின் பங்குதான் மிக முக்கியமானது.

நான் நேரடியாக காஷ்மீர் தாய்மார்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்களிடம் வன்முறைப்பாதை வேண்டாம் என எடுத்து சொல்லுங்கள். அவர்களை வன்முறையை கைவிட்டுவிட்டு ராணுவத்திடம் சரணடைய சொல்லுங்கள். காஷ்மீரை அமைதியாக வைக்க தாய்மார்களால்தான் முடியும்.

காஷ்மீரில் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இது காஷ்மீரின் அனைத்து தாய்மார்களுக்கும் ராணுவம் விடுக்கும் செய்தியாகும் என லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் தெரிவித்தார்.

Trending

Exit mobile version