சினிமா

ஓவியா ஆர்மிக்கு குத்தாட்டம் போட்டு விருந்தளித்த ஓவியா!

Published

on

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள டியோ ரியோ டியா பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனை தொடர்ந்து 2வது சீசனும் முடிந்து விட்டது. ஆனால், இப்போது தான் ஓவியா ஆர்மிக்கு வெள்ளித்திரையில் ஒரு விருந்தை ஓவியா கொடுக்கப் போகிறார்.

அடுத்த வாரம் வெளியாகவுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள டியோ ரியோ டியா பாடலுக்கு செம்ம குத்தாட்டத்தை நடிகை ஓவியா போட்டுள்ளார்.

படக்குழுவினரால் வெளியிடப்பட்ட லிரிக் வீடியோ ஓவியா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை உதய்நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் உரிமையை பெற்று விஷ்ணுவுக்கு உதவியுள்ளது.

 

Trending

Exit mobile version