சினிமா செய்திகள்

அரசியல் களத்துக்கு வரும் நடிகர் அர்ஜுன்; இந்தக் கட்சிக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்

Published

on

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அர்ஜுன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்தார். அப்போது அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டது. ஆனால் விவரம் அறிந்தவர்களோ, சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் அர்ஜுன் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஓர் தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே பிரபல நடிகைகள் கெளதமி, குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், சிவாஜி மகன் ராம்குமார் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் நடிகர் அர்ஜூன் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

குறிப்பாக நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும், நடிகர் அர்ஜூன் சென்னை அடுத்துள்ள அரும்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டிவருகிறார். இதைப் பார்வையிட தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சென்றபோது, அர்ஜூனை பாஜகவில் சேருமாறு அழைப்பது விடுத்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இணைந்துள்ள நடிகைகள் குஷ்பு சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும், கவுதமி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version