சினிமா செய்திகள்

லிப் லாக் இல்லாத இந்தி அர்ஜுன் ரெட்டி டீஸர்.. இதுக்கு வர்மா டீஸர் எவ்வளவோ பரவாயில்லை..

Published

on

விஜயதேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி, இந்திய அளவில் வெற்றியடைந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது.

அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குநர் பாலாவை இயக்கவைத்து, வர்மா என்ற பெயரில் உருவாகி கடைசியில் இது அர்ஜுன் ரெட்டி மாதிரி இல்லை என மொத்த படத்தையும் வேறு இயக்குநர் கொண்டு ஆதித்ய வர்மா என்ற பெயரில் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஷாகித் கபூர் நடிப்பில் இந்தியிலும் அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் ஆகியுள்ளது. அதன் டீசர் வெளியாகி 5 மில்லியன் பார்வைகளை அள்ளி வைரலாகி வருகிறது.

ஆனாலும், அர்ஜுன் ரெட்டி ரசிகர்கள், இந்த படத்தையும் ட்ரால் செய்யாமல் விட்டு வைக்கவில்லை.

என்னடா இது அர்ஜுன் ரெட்டிக்கு வந்த சோதனை.. இதுக்கு வர்மா படம் எவ்வளவோ பரவாயில்லையே என மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக லஸ்ட் ஸ்டோரில் படு கவர்ச்சியாக நடித்த கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.

லிப் லாக் இல்லாத இந்த டீசர் சப்புனு இருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version