சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அசின் மகளின் புகைப்படங்கள்!

Published

on

முன்னாள் தென்னிந்திய நடிகை அசின் 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் ஓனரை திருமணம் செய்து கொண்டார். அசினுக்கும் ராகுல் சர்மாவுக்கும் 2017ம் ஆண்டு குட்டி தேவதை மகளாக பிறந்தார். அசின் தனது மகளுக்கு அவரைப் போலவே அரின் என பெயர் வைத்தார்.

மகளின் புகைப்படத்தை பிறந்த ஒரு வருட காலம் அசின் வெளியே விடவில்லை. மே 1ம் தேதி அசின் தனது மகள் அரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அசின் மகள் ஆட்டுக்குட்டியுடன் விளையாடும் குறும்பு படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

கஜினி, போக்கிரி, சிவகாசி, காவலன், வேல், ஆழ்வார், மஜா என தென்னிந்திய முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த அசின், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியவர்.

seithichurul

Trending

Exit mobile version