உலகம்

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்க நாடு..!

Published

on

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது அர்ஜென்டினா.

அர்ஜென்டினா நாட்டில் கருக்கலைப்பு சட்டப்பூர்வம் ஆக்கப்பட்டது வரலாற்றுச் சாதனை என சர்வதேச ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இதன் அடிப்படையில் 14 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க அந்நாட்டு அரசு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.

1921-ம் ஆண்டு முதல் அர்ஜென்டினா நாட்டில் கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட சட்டம் அமலில் இருந்தது. அன்றிலிருந்து பல போராட்டங்களைக் கண்ட அர்ஜென்டினா அரசு ஒரு வழியாக கருக்கலைப்பை சட்டப்பூர்வம் ஆக்கியுள்ளது. இதனால் அர்ஜென்டினா தலைநகர் ஆன புயனஸ் ஏர்ஸ் வீதிகளில் பெண்கள் மற்றும் பெண்கள் நல அமைப்பினர் பலரும் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அர்ஜென்டினா ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி உள்ளதாகப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version