பல்சுவை

சானிடைசரை நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? சானிடைசர் / சோப் கையை சுத்தப்படுத்த எது சிறந்தது?

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாம் தனிநபர் பாதுகாப்பில் கவனமாக இருப்பது நல்லது. எனவே அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு சானிடைசரை எவ்வாறு கையில் பயன்படுத்த வேண்டும் என்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியர்களாகிய நாம், சானிடைசரை சரியாகப் பயன்படுத்தி கொரோனா கிருமிகளைக் கொல்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சோப், சானிடைசர் இரண்டில் எது பெஸ்ட்?

கைகளை கழுவ சோப் போட்டு கழுவும் போது தான், கையில் உள்ள கிருமிகள் எல்லாம் அழியும். சானிடைசரை விட சோப் மற்றும் தண்ணீர் தான் கைகளை கழுவ ஏற்றதாம்.

சரியான சானிடைசரை தேவு செய்வது எப்படி?

சோப் மற்றும் தண்ணீர் இல்லை என்றால் 60 சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசரை பயன்படுத்தலாம். ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர் வேகமாக கிருமிகளைக் கொல்லும். ஆனால் சானிடைசர் எல்லா கிருமிகளையும் கொல்லாது.

65 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர்கள் தான் கிருமிகளை வேகமாகக் கொல்லும். கிருமிகளைக் கொல்கிறதோ இல்லையோ, கிருமிகளை வளர விடாமல் சானிடைசர்கள் தடுக்கும்.

சானிடைசர்களை பயன்படுத்துவது எப்படி?

சானிடைசரை உள்ளங் கையில் போட்டு இரண்டு கைகள் முழுவதும் காயும் வரை பூச வேண்டும்.
அதிக சானிடைர்களை பயன்படுத்தி அதை துடைத்து எடுப்பது சரியல்ல. பொதுவாக சானிடைசர் பயன்படுத்தும் போது கிருமிகளைக் கொல்ல 30 நொடிகள் வரை நேரம் எடுத்துக்கொள்ளும்.

எண்ணெய் பட்ட கையில் சானிடைசர் பயன்படுத்தலாம்?

கைகளில் மண் அல்லது எண்ணெய் இருக்கும் போது சானிடைசர் பயன்படுத்துவது பயன் அளிக்காது. இது போன்ற சமயங்களில் சோப் பயன்படுத்துவதே சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

சானிடைசரால் கெமிக்கல் / ரசாயனங்களை கைகளிலிருந்து நீக்க முடியாது?

சானிடைசர் கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படும். ஆனால் பூச்சிக்கொல்லி அல்லது பிற இரசாயனங்கள் கைகளிலிருந்தால் இது மேலும் அதிக பாதிப்பையே ஏற்படுத்து.

சானிடைசரை மதுவிற்குப் பதிலாகக் குடிக்கலாமா?

சானிடைசரில் ஆல்கஹால் சேர்க்கப்படுவது உன்மை என்றாலும், அதனுடன் பிற இரசாயனங்களும் சேர்க்கப்படுவதால், சானிடைசரை குடித்தால் அது விஷமாகிவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version