சினிமா

அமலாபாலுடன் திருமணமா? கொந்தளித்த விஷ்ணு விஷால்!

Published

on

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் நடிகை அமலாபாலுக்கும் விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கப்போவதாக, தமிழ் ஃபில்மி பீட் உள்ளிட்ட சில செய்தி சேனல்கள் பரபரப்பு செய்திகள் கிளப்பின.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை டேக் செய்த நடிகர் விஷ்ணு விஷால், ”என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி இது. நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் குடும்பம் உள்ளது. பரபரப்பை கிளப்ப வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமான செய்திகளை வெளியிட வேண்டாம்” என கடுமையாக சாடியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இயக்குநர் ஏ.எல். விஜய்யை முன்னதாக நடிகை அமலாபால் விவாகரத்து செய்திருந்த நிலையில், இப்படத்தில் நடித்த விஷ்ணு விஷாலும் தனது மனைவியை விவகாரத்து செய்ததால், இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்வதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version