இந்தியா

இந்தியாவில் கொரோனா 4வது அலை.. மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்?

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் 4வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை பின்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சீனாவில் அளவுக்கு அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தினமும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா உள்பட மொத்தம் ஐந்து நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பதும், அனைத்து மாநில அரசுகளும் இதை கடைபிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 4வது அலை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் நிலை ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விருந்தோம்பல், சுற்றுலா, போக்குவரத்து, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறைக்கு மாற்ற ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Indian workers work longest compared to other countryஆனால் அதே நேரத்தில் மருத்துவ வல்லுநர்கள் இத்தகைய யூகங்களை மறுத்துள்ளனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இனி எத்தனை அலைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் முறை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version