தமிழ்நாடு

சென்னையில் பேருந்துகள் தனியார்மயமா? உண்மை என்ன.. அமைச்சர் விளக்கம்!

Published

on

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் தனியார் பேருந்துகளை 500 என்ற எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் வந்தன.அதாவது 500 தனியார் பேருந்துகளை முதல் கட்டமாக இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டதாக கூறப்பட்டது.

இது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு தொழிலாளர் சங்கங்கள் பலவும் இதை கடுமையாக விமர்சனம் செய்து எதிர்த்து இருந்தன. இன்று அதிகாலையே போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டன.

buses

இந்த நிலையில்தான் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. அமைச்சர் சிவ சங்கர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில். சென்னையில் தனியார் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல். அப்படி எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை.

அரசு வழித்தடத்தில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி நாங்கள் அனுமதி எதையும் அளிக்கவில்லை. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு எந்த விதமான டெண்டரும் விடப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயக்குவது சரியா, இதன் செயல்பாடு எப்படி இருக்கும், என்பது போன்ற பேருந்து இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

மற்றபடி பேருந்துகளை தனியார்மயமாகும் பேச்சுக்கே இடமில்லை. அதை பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம், என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version