சினிமா

மைக் ஆஃப் செய்தால் வெளியேறனும் தெரியுமா?- செம டோஸ் வாங்கிய ‘அன்பு கேங்’ தலைவி!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற உள்ளது. நேற்று ஜித்தன் ரமேஷ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதேபோல் இன்று மீண்டும் ஒரு ‘அன்பு கேங்’ உறுப்பினர் வெளியேறுவார் என்றே கூறப்படுகிறது.

இன்றைய பிக் பாஸ் இரண்டாம் ப்ரொமோ வீடியோவில் அன்பு கேங் தலைவியை வெளுத்து வாங்குகிறார் கமல். அர்ச்சனா தலைமையிலான அன்பு கேங் இந்த வாரம் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியிலும் நிஷா கமலிடம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். தொடர்ந்து லாவகமாக மைக் ஆஃப் செய்து அர்ச்சனா பேசிக்கொண்டிருப்பதை இன்றைய நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டுகிறார் கமல்.

மைக் ஆஃப் செய்யவில்லை என்பதை அர்ச்சனா மறுத்தாலும் குறும்படம் ஒன்று இன்று வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version