சினிமா செய்திகள்

மகளை பெண் கேட்ட ரசிகருக்கு அர்ச்சனா கூறிய பதிலடி!

Published

on

விஜய் டிவியில் பணிபுரியும் அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட ரசிகருக்கு அவர் கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஜீ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா திடீரென அங்கு இருந்து விலகி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் தற்போது விஜய் டிவியில் உள்ள ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்ச்சனா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் மட்டுமின்றி அவரது மகளும் குடும்பத்தினரும் கூட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர்களிடம் நேரடியாக கேள்விகளுக்கு அர்ச்சனா பதிலளித்த போது திடீரென ஒருவர் ’உங்கள் மகளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் எனக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு அர்ச்சனா, ‘இன்னும் ஒரு பதினைந்து வருடம் கழித்து உங்கள் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து பெண் கேளுங்கள், அப்போது நான் பதில் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். அர்ச்சனாவின் இந்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version