தமிழ்நாடு

அண்ணாமலை வேட்புமனு ஏற்பு: சில பிரமுகர்களின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைப்பு

Published

on

பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது வேட்பு மனுவில் அவர் மீதான வழக்கு பதிவுகள் குறித்து சரியான தகவல் இல்லை என்று எதிர்க்கட்சியினர் கூறிய புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அண்ணாமலை அவர்களின் வேட்புமனு சற்று முன் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களின் வேட்புமனுவும் ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் தொகுதி மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துறைமுகம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட பெயர், வாக்காளர் அடையாள அட்டையிலும் வித்தியாசமாக உள்ளதால் நிறுத்திவைப்பு என தகவல்.

அதேபோல் துறைமுகம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் மேட்டுப்பாளையம், திருவள்ளூர் தொகுதிகளின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் போட்டியிடும் கமலஹாசனின் வேட்புமனுவும், விருத்தாச்சலத்தில் போட்டியிடும் பிரேமலதாவின் வேட்புமனுவும், ஏற்கபட்டுள்ளது. அதேபோல் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் வேட்புமனுவும் ஏற்க்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version