டிவி

‘சீக்கிரமே எல்லா கேள்விகளுக்கும் பதில் தருவேன்!’- அறந்தாங்கி நிஷா வெளியிட்ட புது வீடியோ

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சில நாட்கள் வெளியே வராமல் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார். இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு பதில் சொல்லும் வகையில் புதிய வீடியோவை நிஷா வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் நிஷா, ‘எனக்கு பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி. முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு நீங்க இவ்ளோ ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி. எனக்குத் தொடர்ச்சியா உங்க ஆதரவு வேணும். நான் எங்கேயோ போய்ட்டதா சோஷியல் மீடியாவுல கொஞ்சம் நெகட்டிவான செய்திகள்லாம் பரவிட்டு இருந்துச்சு. அப்படிலாம் எனக்கு ஒண்ணும் ஆகல. இங்கதான் இருக்கேன்னு சொல்லத்தான் இந்த வீடியோ.

உங்களுக்கு என் கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கும். எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். யார பற்றி வேணாலும் கேள்வி கேட்கலாம். எல்லா கேள்விகளுக்கும் நான் நேர்மையான பதில சொல்லுவேனு உறுதியா சொல்லிக்கிறேன். நான் சீக்கிரமே நீங்க விரும்புற நிஷாவ வருவேன். நன்றி’ என்று முடித்துக் கொண்டார்.

நிஷா, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட விதம் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version