சினிமா செய்திகள்

44 வயதில் புல்லட் ஓட்டி அசத்தும் நடிகையின் வீடியோ!

Published

on

44 வயதில் புல்லட் ஓட்டி அசத்தும் நடிகை ஒருவரின் வீடியோ அவருடைய இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பிரகதி. இவர் பாக்யராஜின் ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பெண், வம்சம், அரண்மனை கிளி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்ற இவர் உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் உள்ளவர் என்பதும் அவரது உடற்பயிற்சி குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்றில் அவர் அசால்டாக புல்லட் ஓட்டுகிறார். புல்லட்டை ஓட்டுவதில் ஆண்களுக்கே சிரமம் இருக்கும் நிலையில் ஆண்களுக்கு இணையாக வெகுசிறப்பாக புல்லட் ஓட்டி வரும் பிரகதியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CMRgQ-lDfOJ/

Trending

Exit mobile version