டிவி

வெளியே வந்தும் அன்பு பிரசாரம் செய்த அறந்தாங்கி நிஷா- கலாய்த்த ‘விஜய் டிவி’ புகழ்..!

Published

on

விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிஷா மீண்டும் அன்பு பிரசாரம் செய்ய விஜய் டிவி புகழிடம் கலாய் வாங்கியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து நிஷா இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். தற்போது சிறிய ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெறத் தொடங்கியுள்ளார். அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியின் நடுவே விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி புகழிடம் சிக்கி கேலிக்கு உண்டாகியுள்ளார் நிஷா. விஜய் டிவி டிஜே ப்ளாக் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மீண்டும், “அன்புதான் ஜெயிக்கும். அன்பு இருக்குன்னு நம்புறேன்” என நிஷா வசனம் பேச அங்கு வந்த புகழ், “அதான் எலிமினேட் ஆயிட்டேல, கிளம்பு” எனச் சொல்லி கேலி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version